
Cinema
நான்காவது திருமணத்தை அறிவித்த வனிதா விஜயகுமார்… மாப்பிள்ளை யார் தெரியுமா…???
நடிகை வனிதா விஜயகுமார் பற்றி தெரியாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவர் திரையுலகில் பிரபலம். இவர் முதன் முதலில் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அதன் பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா இரண்டாவதாக தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்தார். அவருக்கு ஒரு மகள் உள்ளார். பின் அவரையும் விவாகரத்து செய்த வனிதா கடந்த 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வனிதா அவரை பிரிந்தார். அதனை தொடர்ந்து பீட்டரும் சில நாட்களிலேயே திடீரென மரணமடைந்தார். இந்நிலையில் தற்போது வனிதா நான்காவது திருமணத்தை அறிவித்துள்ளார். அதன்படி அவர் பிரபல நடன இயக்குனர் ராபர்ட்டை வரும் அக்டோபர் 5ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#image_title