
General
பெண் காவலரிடம் கொடூரமாக நடந்த விசிக தொண்டர்கள்…. மாநாட்டில் பரபரப்பு…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று தேசிய அளவில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாநாடு நடைபெற்றது. இதனை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் இந்த மாநாட்டில் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் மாநாடு தொடங்கிய சிறிது நேரத்திலேயே அங்கு குவிந்த இளைஞர் பட்டாளம் தடுப்புகளை தாண்டி மேடையை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது காவலர்களுக்கும் விசிக நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் பெண் காவலர் ஒருவர் கூட்டத்தில் சிக்கினார். அவரை விசிக நிர்வாகிகள் இழுத்து தள்ளி விடும் காட்சி சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.