Cinema
கோட் படத்தில் நயன்தாரா…. வெங்கட் பிரபு கூறிய புதிய தகவல்….!!!!
விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியாகியுள்ள கோட் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ளார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை சினேகா நடித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு கூறியதாவது, “சினேகாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் நயன்தாராவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது சரியாக அமையவில்லை. இதனை தொடர்ந்து படம் வெளியான பின்னர் படத்தை பார்த்த நயன்தாரா எனக்கு போன் செய்து இந்த கதாபாத்திரத்திற்கு சினேகா தான் மிகவும் பொருத்தமாக இருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக சினேகா நடித்துள்ளார் என்று கூறியதாக” வெங்கட் பிரபு கூறியுள்ளார்