
Cinema
விஜய்யும் நானும் தான் வேட்டையன் படம் பார்த்தோம்…. வெங்கட் பிரபு கூறிய சுவாரஸ்ய தகவல்….!!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் தான் வேட்டையன். ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், பகத் பாசில் மற்றும் ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

#image_title
படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளே நடிகர் விஜய் சென்னை தேவி தியேட்டரில் முதல் காட்சியை பார்த்தார் என்று செய்திகள் வெளியானதோடு அதுதொடர்பான வீடியோவும் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நானும் விஜய்யும் சேர்ந்து தான் வேட்டையன் படம் பார்த்தோம். இருவரும் என்ஜாய் செய்து படத்தை பார்த்தோம். எல்லாருமே தலைவர் ரசிகர்கள் தானே.

#image_title
விஜய் சார் மீண்டும் படம் நடிக்க வருவாரா என்பது தெரியவில்லை. அது தெரியாமல் நான் எப்படி அவரும் அஜித் சாரும் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா எனக் கூறமுடியும்” என பதில் அளித்தார். இவ்வளவு விமர்சனங்களுக்கு மத்தியிலும் விஜய் ரசிகர்கள் வேட்டையன் விஜய் வேட்டையன் படம் பார்த்தது அவர் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.