
Television
சாக்கடையில் கல் எறிந்தால் நம் மீது தான் விழும்…. பயில்வான் ரங்கநாதன் குறித்து பேசிய வெங்கடேஷ் பட்…!!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட் வெளியேறுவதாக அறிவித்து அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இதற்கிடையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தையும் வெங்கடேஷ் பட் கூறியிருந்தார். ஆனால் வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதாகவும் அதற்கு மறுத்துவிட்டதால் தான் வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார் எனவும் பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள வெங்கடேஷ் பட், “பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். பயில்வான் ரங்கநாதன் எதற்காக இப்படியெல்லாம் பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா? அல்லது பணத்துக்காக இப்படி பேசுகிறாரா? என்று புரியவில்லை. எது எப்படியோ நம்மை பற்றி ஒருவர் தவறாக பேசி விட்டார் என்றால் அவரை பற்றி நாமும் தவறாக பேச வேண்டும் என்று அவசியமில்லை. சாக்கடையில் கல் எறிந்தால் அது நம் மீதும் விழ தான் செய்யும். நடக்காதது, இல்லாததை பற்றி தான் அவர் பேசி கொண்டிருக்கிறார். அதனால் அதற்காக நாம் ரியாக்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என கூறியுள்ளார்.
View this post on Instagram