General
கொடி அறிமுக விழாவிற்கு விஜய் வந்த காருக்கு அபராதம்…. தீராத கார் பஞ்சாயத்து…!!!
நடிகர் விஜய் அவரின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை நேற்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் TN 37 DR 1111 என்ற பதிவு எண் கொண்ட டொயோட்டா இனோவா கிரிஸ்டா காரில் வந்திருந்தார். இந்த கார் கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கார் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறி இதுவரை 4,700 ரூபாய் அபராதம் நிலுவையில் உள்ளதாம். இதில் இறுதியாக விதிக்கப்பட்ட 200 ரூபாய் அபராதம் மட்டுமே செலுத்தியுள்ளனர். இந்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. முன்னதாக விஜய் பலமுறை கார் குறித்த சிக்கல்களில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.