Television
விஜய் டிவி ராமருக்கு எதிராக எழுந்த விமர்சனங்கள்…. புத்தக திருவிழாவில் வெடித்த புதிய சர்ச்சை…!!!
மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த 6ஆம் தேதி தொடங்கியுள்ள புத்தக திருவிழா வரும் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று பேச சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, மதுரை எம்பி சு.வெங்கடேசன், பேச்சாளர்கள் ஞானசம்பந்தன், ஐ லியோனி உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடன் விஜய் டிவி பிரபலம் ராமரும் அழைக்கப்பட்டார். ஆனால் தற்போது இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்திருப்பதால், ராமரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். அதாவது, புத்தக திருவிழாவில் அது தொடர்பான நபர்களை தான் சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசும் இவரை அழைப்பது எந்த விதத்தில் நியாயம் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மற்றொரு பக்கம் அவர் பெயரை நீக்கியதற்கு சிலர் ராமருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள்.