Television
திடீரென திருமணம் செய்து கொண்டு விஜய் டிவி சீரியல் நடிகர்…. யார் தெரியுமா….???
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் கண்ணன் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகர் அவினாஷ். இவர் வேறு யாருமல்ல பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை அக்ஷிதாவின் அண்ணன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவினாஷ் கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த தனது காதலியை திடீரென திருமணம் செய்துள்ளார். அவினாஷ் தமிழில் பல சீரியல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் தனது காதலியை கரம்பிடித்துள்ள அவினாஷின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.