Television
ஒவ்வொரு முறையும் ஹீரோவை மட்டும் பங்கம் செய்யும் இயக்குனர்…. முத்துவுக்கு இப்படி நிலைமையா…????
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் சிட்டி செய்த வேலையால் வீடியோ டிரெண்டாக முத்துவை பலரும் தவறாகவே பேசுகிறார்கள். மேலும் சத்யாவும் அந்த வீடியோவை மீனாவிடம் போட்டு கட்டி மிகவும் கேவலமாக பேச கோபமாகும் அங்கிருந்து கிளம்புகிறார்.

#image_title
இதற்கிடையில் வீட்டில் இதுதான் சசமயம் என்று ரோகிணியும் மனோஜும் முத்துவின் வீடியோவை அனைவருக்கும் போட்டு காட்டி முத்துவை அசிங்கப்படுத்துகிறார்கள். அதை பார்த்து ரவி மட்டுமே முத்துவிற்கு ஆதரவாக பேசுகிறார். விஜயாவிற்கு ஏற்கனவே முத்துவை பிடிக்காததால் இந்த விஷயத்தில் அவர் மீது மிகவும் கோபமாக இருக்கிறார்.
மேலும் இந்த முத்து மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கான். மனோஜும் ரோகிணியும் சின்னதா தப்பு பண்ணா அதை பெருசா ஊதி பிரச்சனை பண்ணுவான். இப்போ அவனே இப்படி பண்ணிருக்கான். நம்ம சொந்தக்காரங்க முன்னாடி மானமே போக போகுது என்று அண்ணாமலையிடம் விஜயா புகார் கூறுகிறார்.

#image_title
மற்றொருபுறம் இந்த வீடியோவை பார்க்கும் ஸ்ருதியின் அப்பா கமிஷ்னருக்கு போன் செய்து இதுபோன்ற ஆட்களை விடக்கூடாது என்று போட்டு கொடுக்கிறார். அதனால் முத்துவின் காரை மறிக்கும் காவலர்கள் அவரின் காரை பறிமுதல் செய்வதோடு லைசென்ஸையும் பறித்து கொள்கிறார்கள். முத்து எவ்வளவு சொல்லியும் அவர்கள் நம்புவதாக இல்லை.

#image_title
நாளைய ப்ரோமோவில் முத்துவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மனோஜ் அசிங்கப்படுத்தி பேசுகிறார். அப்போது முத்து அவரை அடிக்க பாய தடுக்கும் அண்ணாமலை முத்துவை அடிக்க கை ஓங்குகிறார். எப்படியோ ஹீரோ என்று கூறி ஒவ்வொரு முறையும் முத்துவை தான் அசிங்கப்படுத்துகிறார்கள். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.