Television
முத்துவுக்காக மீனா எடுத்த அதிரடி முடிவு….. விஜயாவுக்கு நடந்த வேற லெவல் சம்பவம்….!!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து நான் குடிக்கவே இல்லை என்று எவ்வளவோ சொல்லியும் மீனா நம்பவில்லை. நல்ல வேளை என் அப்பா உயிரோட இல்ல அவர் இருந்திருந்தா இதையெல்லாம் பார்த்து காலம் முழுக்க கஷ்டப்பட்டு இருப்பாரு என்று சொல்கிறார்.

#image_title
உடனே முத்து யாரும் என்னை நம்ப வேண்டாம். நான் குடிகாரனாவே இருக்கேன் என்று கூறி கோபமாக அங்கிருந்து செல்கிறார். பின் மீனா பூ டெலிவரி செய்ய செல்கிறார். அங்கு இருக்கும் பெண்கள் முத்துவின் வீடியோ குறித்து பேச ஒரு பெண் தனது கணவரும் இப்படிதான் குடித்தார். பக்கத்து வீட்டுக்காரங்க ஒரு பொடி சொன்னாங்க அதை குடுத்ததும் அவரு குடிய நிப்பாட்டிட்டாரு என்று சொல்கிறார்.
அதை கேட்டதும் மீனா அந்த பொடியை வாங்கி கொண்டு வீட்டிற்கு வருகிறார். எப்படியாவது முத்துவை குடியில் இருந்து மீட்க வேண்டும் என்பதற்காக ஜூஸில் அந்த பொடியை கலந்து வைக்க அண்ணாமலை ஏதோ ஆர்டர் வந்திருப்பதாக கூறி மீனாவை கீழே அழைக்கிறார்.

#image_title
மீனா கீழே சென்ற கேப்பில் கிச்சனுக்கு வரும் விஜயா ஜூஸ் இருப்பதை பார்த்ததும் எப்படியும் முத்துவுக்கு தான் வச்சிருப்பா என்று அதை எடுத்து குடித்து விடுகிறார். பின் மீனா கிச்சனுக்கு வந்து பார்க்கும்போது ஜூஸ் இல்லாததை கண்டு ஷாக்காகிறார். அதுகுறித்து விஜயாவிடம் கேட்க ஆமாம் நான் தான் குடிச்சேன் என்கிறார்.
மேலும் உன் புருஷன் இதெல்லாம் குடிக்க மாட்டான். தண்ணி கலக்காம சரக்கு தான் குடிப்பான் என்று கூறி நக்கல் செய்கிறார். இதனால் பொடி கொடுத்த பெண்ணுக்கு மீனா போன் செய்ய அவர் போனை எடுக்கவில்லை. சரி நேரில் சென்று பார்க்கலாம் என்று மீனா செல்கிறார்..

#image_title
அப்போது வழியில் மீனாவை பார்க்கும் செல்வம் முத்து உண்மையாகவே குடிக்கவில்லை. அந்த வீடியோ உண்மையில்லை என்று கூறுகிறார். அதை கேட்டு எதை நம்புவது என்றே தெரியவில்லை. நான் வேற வேலையா போறேன். அப்புறமா உங்களை பார்க்குறேன் என்று கூறி விட்டு மீனா கிளம்புகிறார். அதற்குள் விஜயாவிற்கு வயிற்றை கலக்க பாத்ரூமுக்கு ஓடுவதுடன் இன்றைய எபிசோட் முடிகிறது.