Television
மீனாவை போட்டுக்கொடுத்த ரோகிணி…. லெட்டரை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயா…!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா விஜயாவிற்கு சாப்பாடு எடுத்து செல்கிறார். அப்போது என்ன சாப்பாடு என்று விஜயா கேட்க பிரியாணி என மீனா கூறுகிறார். அதை கேட்டு வீட்ல சமைச்சியா என்று விஜயா கேட்க இல்ல கடையில தான் வாங்குனேன். நிறைய வேலை இருந்ததால சமைக்க முடியல என மீனா கூறுகிறார். அதற்கு பார்வதி நான் காலையில தான் பிரியாணி சாப்பிடனும்னு நினைச்சேன் அதே மாதிரி மீனா வாங்கிட்டு வந்துட்டா என கூறுகிறார்.

#image_title
பின் தனக்கு மாலை கொடுக்க வேண்டும் என்பதால், மீனா கிளம்பி விடுகிறார். அதேசமயம் சத்யாவின் வண்டியை டிராபிக் போலீஸ் நிறுத்தி செக் செய்கிறார்கள். அதில் பீர் பாட்டில்கள் உள்ளது. அப்போது அங்கு வரும் முத்துவின் காரையும் டிராபிக் போலீஸ் செக் செய்கிறார்கள். அப்போது சத்யாவை பார்க்கும் முத்து இப்படி குடிச்சிட்டு இருந்தா நடுத்தெருவுல தான் நிற்கனும். இதை அனுபவபட்டவன் சொல்றேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார்.

#image_title
மற்றொரு புறம் பிரியாணி சாப்பிட்டதால் ஜீரணம் ஆகாத விஜயா நெஞ்சை பிடித்து புலம்புகிறார். அங்கு வரும் அண்ணாமலை அதான் மீனா வீட்ல கீரை பொரியல்னு பண்ணி இருந்தாளே நீ எதுக்கு பிரியாணி சாப்பிட்ட என கேட்கிறார். அதற்கு விஜயா அவதான் எனக்கு பிரியாணி வாங்கி கொடுத்தா என்று சொல்கிறார். உடனே இதுதான் சந்தர்ப்பம் என்று ரோகிணி கொண்டு போன சாப்பாட்டை என்ன பண்ணீங்க என மீனாவிடம் கேட்கிறார்.

#image_title
அதற்கு மீனா தயங்கி தயங்கி ரோட்டில் மயங்கி கிடந்த தாத்தா பாட்டிக்கு கொடுத்தாக கூற முத்துவும் அண்ணாமலையும் மீனாவை பாராட்டுகிறார்கள். ஆனால் விஜயா மட்டும் யார் வீட்டு சாப்பாட்டை யாருக்கு போடுற என கேட்டு அவரை திட்டுகிறார். பின் மனோஜ் அந்த லெட்டரை நினைத்து தூங்காமல் தவிக்கிறார். உடனே விஜயாவிற்கு போன் செய்து மொட்டை மாடிக்கு வர சொல்கிறார். அந்த லெட்டரை பார்க்கும் விஜயா ஷாக்காகிறார். ஏனெனில் அதில் உங்க அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும் என எழுதி உள்ளது. அதை பார்த்து விஜயா பயப்படுகிறார்.