
Television
கொலு பூஜையில் அசிங்கப்பட்ட விஜயா…. பாராட்டை தட்டி சென்ற மீனா…!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கொலுவிற்காக பொம்மைகளை அடுக்கி வைக்கிறார். அதை பார்த்த முத்து நீயும் பொம்மை மாதிரி தான் இருக்க. பேசாம நீயும் உட்கார்ந்துக்கோ என ரொமாண்டிக்காக பேசுகிறார். அந்த சமயத்தில் ரோகிணி மற்றும் வித்யா அங்கு வருகிறார்கள். அப்போது வித்யா என்னடி கூட்டம் அதிகமா இருக்கும் போலயே என கேட்க ரோகிணி ஆமாம் இதை பயன்படுத்தி எப்படியாவது முத்து போனை எடுத்துடனும் என திட்டம் போடுகிறார்.

#image_title
பின் மீனா அம்மா மற்றும் அவரின் தங்கை சீதா என ஒவ்வொருவராக கொலு பூஜைக்கு வருகிறார்கள். அதே சமயத்தில் விஜயாவின் ஸ்டூடன்ட்டான தீபனும் ரதியும் வருகிறார்கள். எல்லாரும் வந்த உடன் விஜயா பாட்டு பாடுவதற்கு தயாராகிறார். அவர் கொடுத்த பில்டப்பை பார்த்து அனைவரும் நன்றாக பாடுவார் என்று நினைக்கிறார்கள். ஆனால் விஜயா பாடுவதை காது கொடுத்து கேட்க முடியவில்லை. அவர் பாட ஆரம்பித்ததும் நாய் குரைக்கிறது.

#image_title
முத்துவும் அண்ணாமலையிடம் என்னப்பா அம்மா குரல் தார் ரோட்ல தகர டப்பாவை உருட்டுன மாதிரி இருக்கு என கிண்டல் செய்கிறார். அவர் மட்டுமல்ல ரோகிணி மற்றும் வித்யாவும் விஜயாவை கிண்டல் செய்து சிரிக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை மட்டும் விஜயா சந்தோசப்பட வேண்டும் என்பதற்காக விஜயா ஒன்ஸ் மோர் என கேட்கிறார். அதை பார்த்து அனைவரும் ஷாக்காகிறார்கள். ஆனால் விஜயா மட்டும் மகிழ்ச்சியாக பாடுகிறார். இப்போது நிறைய நாய்கள் ஒன்று சேர்ந்து குரைக்கின்றன.

#image_title
அதைவிட ஹைலைட் என்னவென்றால் பக்கத்து வீட்டுக்காரர் முத்துவை அழைத்து கொலு வைக்கிறதெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா உங்க அப்பா ஏன் உங்க அம்மா மாதிரி பாடுறாரு என கேட்டு அசிங்கப்படுத்துகிறார். அதை கேட்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். விஜயாவிற்கு ஒரே அசிங்கமாகி விடுகிறது. பின் மீனா பிரமாதமாக பாட்டு பாடி அசத்துகிறார். அனைவரும் அவரை பாராட்டுகிறார்கள்.