Connect with us
   

Gallery

முதல் முறையாக குழந்தையுடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகை அபிராமி….!!!!

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அபிராமி கல்லூரி படிக்கும்போது தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அவரின் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகவே அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

#image_title

#image_title

#image_title

அதன்படி பத்ரம் என்ற மலையாள படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் அர்ஜூன் நடிப்பில் வெளியான வானவில் என்ற படம் மூலம் அறிமுகமானார்.

#image_title

#image_title

#image_title

பின் சமுத்திரம், சார்லி சாப்ளின், தோஸ்த் போன்ற பல படங்களில் நடித்த இவருக்கு கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி படம் தான் பெரியளவில் பெயர் பெற்று தந்தது.

#image_title

#image_title

#image_title

ஒருகட்டத்திற்கு மேல் தனது பெற்றோருடன் அமெரிக்காவிற்கு சென்ற அபிராமிக்கு அங்கு வேலை கிடைக்க சினிமாவிற்கு டாடா காட்டி விட்டு அங்கேயே செட்டிலாகி விட்டார்.

#image_title

#image_title

#image_title

இதற்கிடையில் இவருக்கு பிரபல எழுத்தாளர் பாவனனின் பேரன் ராகுல் என்பவருடன் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஜோடி கடந்த ஆண்டு பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்தனர்.

#image_title

#image_title

#image_title

அந்த குழந்தைக்கு கல்கி என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது அபிராமி முதல் முறையாக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top