General
எங்களுக்கு டாஸ்மாக் வேண்டும்… திரண்டு வந்து மனு அளித்த கிராம மக்கள்…!!!
பொதுவாக டாஸ்மாக் கடைகள் வேண்டாம் அல்லது ஏற்கனவே உள்ள கடையை அகற்ற வேண்டும் என்று கூறி தான் பொதுமக்கள் மனு அளிப்பார்கள். ஆனால் இங்கு ஒரு கிராமமே சேர்ந்து தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்து தரக்கோரி மனு அளித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பட்டி, நல்லாம்பட்டி, ஆதனூர், பலஞ்சர அள்ளி, கெட்டூர், நலப்பரம்பட்டி ஆகிய 7 கிராமங்களில் மது கடைகள் கிடையாது. இதனால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுக்கடை வேண்டுமென கோரி மனு கொடுத்துள்ளனர். இந்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.