General
உணவு இடைவேளையில் உடலுறவு கொள்ளுங்கள்… ரஷ்ய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!
ரஷ்யாவில் தற்போது மக்கள் தொகை சரிந்து வருவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இப்போது இல்லை என்றாலும் எதிர்காலத்தில் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும். இந்த சூழலில் ரஷ்ய அதிபர் புதின் இந்த விவகாரத்தில் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி புதின் கூறியதாவது, “வேலை செய்யும் இடத்தில், மதிய உணவு மற்றும் காஃபி இடைவேளையின் போது உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள்” என நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வேலையில் பிஸியாக இருப்பதால் குழந்தையைத் தள்ளிப் போடுகிறோம் என கூறுவதை ஏற்க முடியாது. நாம் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரேக் நேரத்தை பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்குங்கள் என்று கூறியுள்ளார்.