Cinema
எங்கு சென்றாலும் பேக் மாட்டி செல்லும் பாலய்யா…. என்ன காரணம் தெரியுமா….???
தெலுங்கு சினிமாவில் பிரபலமான மூத்த நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் பாலய்யா என்றே அழைப்பார்கள். இவரின் நடிப்பு மற்றும் நடனத்தை சோசியல் மீடியாவில் பயங்கரமாக டிரோல் செய்வார்கள். இருப்பினும் தெலுங்கு திரையுலகில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பாலய்யா எங்கு சென்றாலும் அவரின் தோளில் ஸ்கூல் பையன் போல பேக் ஒன்றை மாட்டி கொண்டு செல்கிறார். அப்படி அந்த பேக்கில் என்ன உள்ளது என்பது குறித்து அவரின் மருமகன் ஸ்ரீ பரத் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “பாலகிருஷ்ணாவுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அதிலும் குறிப்பாக Mansion House என்ற பிராண்ட் சரக்கை தான் அவர் விரும்பி குடிப்பார். அதனால் அவர் எங்கு சென்றாலும் அந்த சரக்கு பாட்டிலையும் கையில் எடுத்து செல்வார். வெளிநாட்டுக்கே சென்றாலும் அந்த மதுபாட்டிலை எடுத்து சென்றுவிடுவார். பால அதனுடன் சுடுதண்ணீரையும் பேக்கில் வைத்திருப்பார். சரக்கு சுடுதண்ணீர் கலந்து குடிப்பது தான் அவரின் பழக்கம்” என கூறியுள்ளார்.