General
ஸ்டாண்ட் அப் காமெடியன் டூ ஆன்மிக சொற்பொழிவாளர்…. யார் இந்த மகா விஷ்ணு….????
சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் பாவ புண்ணியம் மறுபிறவி என மாணவர்கள் மத்தியில் சர்ச்சையான விஷயங்களை பேசி பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள மகா விஷ்ணு குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்த மகா விஷ்ணு பல ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக பங்கேற்றுள்ளார். அதுமட்டுமல்ல பரம்பொருள் வாழ்வியல் வகுப்பு என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வரும் இந்த மகா விஷ்ணு வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு சித்த மருத்துவம் படித்திருப்பதாக கூறி காயகல்ப லேகியமும் விற்பனை செய்து வருகிறாராம். இதுதவிர தமிழில் நான் செய்த குறும்பு என்ற படம் ஒன்றை இவர் தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாம். இதைவிட பெரிய உருட்டு என்னவென்றால் தான் பெருமாளின் அவதாரம் என குடுகுடுப்பைக்காரர் தனது தாயாரிடம் கூறியதாக மகா விஷ்ணு கதை விட்டு வருகிறார்.