
Television
ரூமை எட்டி பார்க்குறாரு…. ஜெஃப்ரி மீது குவியும் புகார்களால் வெடித்த சர்ச்சை….!!!!
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இதற்கு முன்பாக ஒளிபரப்பான சீசன்களை விட சற்று சுவாரஸ்யம் குறைவாகவே சென்று கொண்டிருக்கிறது. இதுவரை பெரிய கன்டென்ட் எதுவும் கிடைக்கவில்லை. அதிலும் இந்த சீசனில் தான் ரொம்ப போரிங்கான போட்டியாளர்கள் இருப்பதாக பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள்.

#image_title
இப்படி உள்ள சூழலில் கானா பிரபலம் ஜெஃப்ரி மீது பெண் போட்டியாளர்கள் அடுத்தடுத்து புகார்களை அடுக்கி வருகிறார்கள். அதன்படி ஜாக்குலின் விதியை மீறி கிச்சனில் நுழைந்து பாத்திரம் கழுவும் லிக்யூடை திருடிச் சென்றார். இதை கண்டுபிடித்த ஆண்கள் அணியினர் அவரிடம் அதை திரும்ப தருமாறு கேட்டனர்.
அப்போது ஜாக்குலின் பாதி லிக்யூடை வேறு ஒரு கப்பில் ஊற்றி வைத்து விட்டு மீதி உள்ளதை மட்டும் கொடுத்தார். இதை ஜெஃப்ரி எட்டிப்பார்த்து விட்டார். அதை கவனித்த ஜாக்குலின், நீ ஏன் எங்க ரூம எட்டி பாக்குற? ரொம்ப தப்பா இருக்கு என்று சொல்லி ஜெஃப்ரியை எச்சரித்தார்.

#image_title
அதுமட்டுமல்ல இதேபோல தான் நேற்று நடந்த நாமினேஷனின் போது ஜெஃப்ரிக்கு கொஞ்சம் இடம் கொடுத்தா ரொம்ப தப்பா நடந்துக்குறான் என்று கூறி செளந்தர்யா அவரை நாமினேட் செய்தார். இப்படி அடுத்தடுத்து பெண் போட்டியாளர்கள் ஜெஃப்ரி மீது புகார் கூறுவதால் அடுத்த பிரதீப்பாகி விடுவாரோ என்ற கேள்வி எழுகிறது.
கடந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பிரதீப் ஆண்டனி மீது பெண்கள் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு, அவர் இருந்தால் இந்த வீட்டில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் போர்க்கொடி தூக்கினர். இதனை தீர விசாரிக்காமல் கமல்ஹாசனும் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.