Cinema
Don’t Touch Me என்று சொன்னாரா அஜித்…. யோகி பாபுவால் வெடித்த பிரச்சனை…!!!
தமிழில் தற்போது காமெடி மற்றும் குணச்சித்திரம் என கலக்கி வரும் யோகி பாபு முன்னதாக எப்போதோ அளித்த பேட்டி ஒன்றில், “பல ஆண்டுகளுக்கு முன், ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த போது பிரபல நடிகர் ஒருவரை தெரியாமல் நான் தொட்டு விட்டேன். அதற்கு அவர் டோண்ட் டச் மீ என்று கோபமாக என்னிடம் கூறினார்” என கூறியிருந்தார். ஆனால் அந்த நடிகர் யார் என்பதை யோகி பாபு சொல்லவில்லை. இந்நிலையில் அந்த நடிகர் அஜித் தான் என யோகி பாபு கூறியதாக வலைப்பேச்சு யூடியூப் சேனல் அந்தணன் மற்றும் பிஸ்மி ஆகியோர் கூறியுள்ளார்கள். இந்த விஷயத்தை யோகி பாபுவே எங்களிடம் கூறினார். நாங்கள் தான் நாகரிகம் கருதி இதுவரை இதை வெளியே சொல்லாமல் இருந்தோம் என கூறியுள்ளனர். இதை கேட்ட அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர்.