Cinema
ஆண்களையும் விட்டு வைக்காத மலையாள சினிமா…. பாலியல் புகார் அளித்த இளம் நடிகர்….!!!
மலையாள திரையுலகில் சமீபத்தில் வெளியான ஹேமா அறிக்கை மூலம் பல பாலியல் புகார்கள் வெளிவர தொடங்கியுள்ளன. இதில் பல முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிக்கி வருகிறார்கள். மேலும் நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டு நடிகர் மோகன் லால் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது மலையாள சினிமாவில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். அந்த வகையில் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இயக்குனர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் நடிகர் நவஜீத் நாராயணன் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு நன்றாக தெரிந்த இயக்குனர் ஒருவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று என்னிடம் கேட்டார். பின் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். நான் அவர் முகத்தில் அறைந்து விட்டு கிளம்பி விட்டேன்” என கூறியுள்ளார். இது மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.