General
சந்தையில் விற்கப்படும் இளம் பெண்கள்… அதிலும் கன்னி பெண்களுக்கு மவுசு அதிகமாம்….!!!!
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷிவ்புரி என்ற கிராமத்தில் வித்தியாசமான நடைமுறை ஒன்று உள்ளது. இதனை தாடிச்சா “Dhadicha” என்று அழைக்கிறார்கள். அதாவது, இங்குள்ள பெண்கள், சந்தையில் விலைக்கு விற்கப்படுகிறார்களாம். ஆனால் மொத்தமாக விலைக்கு விற்காமல் வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் போட்டு வாங்கி செல்கிறார்கள். குறைந்தது 15,000 ரூபாய் முதல், லட்சங்கள் வரை இந்த சந்தையில் பெண்கள் விலைக்கு விற்கப்படுகிறார்கள். இதில், கன்னிப் பெண்களுக்கு தான் நிறைய மவுசு இருக்கிறதாம். ஒரு ஆண் ஒரு பெண்ணை ஒரு வருடம் அல்லது சில மாதங்களுக்கு மட்டுமே வாடகைக்கு அழைத்து செல்லலாம். ஆண்கள் தங்களின் வீட்டு வேலைக்கு, வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்வதற்கு, திருமணமாகாத ஆண்கள் அதுவரை இப்பெண்களை தங்களுடன் வைத்துக்கொள்வது என பல காரணங்களுக்காக வாடகைக்கு அழைத்து செல்கிறார்கள். ஆனால் இங்குள்ள பெண்கள் சந்தையில் விலை போவதற்கு ஒரே காரணம் வறுமை என்பதுதான் கொடூரத்தின் உச்சம்.