General
தோனியை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் யுவராஜ் சிங் தந்தை…. மெளனம் காப்பது ஏன்….????
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வீரர் யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பின்னர் அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு தோனி தான் காரணம் என கூறி இப்போது வரை யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அடிக்கடி தோனியை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். ஆனால் யுவராஜ் சிங் ஏன் அவரின் தந்தையை தடுக்கவில்லை என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இந்த கேள்விக்கு யுவராஜ் சிங்கின் சுயசரிதை பதில் அளித்துள்ளது. அதன்படி அதில் அவர் கூறியிருப்பதாவது, “என் தந்தை மிகவும் கண்டிப்பானவர். நான் சிறுவயதில் கிரிக்கெட்டில் ரன் சேர்க்கவில்லை என்றால் என்னை வீட்டிற்குள் சேர்க்க மாட்டார். இப்படி பல நாட்கள் நான் காரில் தூங்கியுள்ளேன். ஒருவேளை நான் சதம் அடித்து வந்தால் கூட ஏன் இரட்டை சதம் அடிக்கவில்லை என்று கூறி திட்டுவாராம். வீட்டில் நிம்மதியே கிடையாது. எப்போதும் சண்டை தான். நான் சில காலம் என் அம்மாவுடன் தான் இருந்தேன்” என கூறியுள்ளார். இதன் மூலம் யுவராஜ் சிங் அவரது தந்தையுடன் பேச்சு வார்த்தையில் இல்லை என்றும் அதனால் தான் அந்த கருத்துக்கு பதில் பேசவில்லை எனவும் அவரின் நட்பு வட்டாரங்கள் கூறுகின்றன.