General
என் மகன் வாழ்க்கையை அழித்து விட்டார்…. தோனியை மன்னிக்கவே மாட்டேன்…. யுவராஜ் சிங் அப்பா காட்டம்…!!!
இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்த சமயத்தில் ஆல்ரவுண்டர் வீரர் யுவராஜ் சிங்கும் அணியில் விளையாடி வந்தார். பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த யுவராஜ் சிங்குக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு தோனி தான் காரணம் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து யுவராஜ் சிங்கின் அப்பா யோக்ராஜ் சிங் அவ்வபோது தோனியை விமர்சித்து பேசி வந்தார். அந்த வகையில் தற்போது அவர் கூறியிருப்பதாவது, “நான் தோனியை மன்னிக்கவே மாட்டேன். அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், எனது மகனுக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார். எல்லா விஷயமும் இப்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதை என் வாழ்க்கையில் மன்னிக்கவே முடியாது. தோனி என் மகனின் வாழ்க்கையையே அழித்துவிட்டார். யுவராஜ் சிங் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் விளையாடி இருப்பார். யுவராஜ் சிங் போன்ற ஒரு மகனை முடிந்தால், நீங்கள் பெற்று எடுங்கள்” என கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.